Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆத்திர அவசரம்னா பஸ் ஏற முடியல….. வேலிய எடுங்க PLEASE…… நெல்லை மக்கள் மாநகராட்சியில் கோரிக்கை…!!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலி கம்பங்களை அகற்றிட கோரி மாநகராட்சி அலுவலக மையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மாநகர ஆணையரிடம் தெரிவிக்க மனுக்களை கொண்டு வந்திருந்தனர். அந்த வகையில்,

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் பேருந்து நிலையத்தில் உள்ள வேலியை அகற்ற கோரிய மனு ஒன்றை அளித்தனர். அதில் தற்போது மாநகராட்சி சார்பில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதிகளில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரம் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களும் ஒரு ஆத்திர அவசரத்திற்கு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பேருந்தில் ஓடிச்சென்று ஏற முடியவில்லை சுற்றி செல்வதற்குள் தாமதமாகி பேருந்து சென்று விடுகிறது. இதன் காரணமாக வேலி அமைக்கப்பட்ட  பகுதிக்கு அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு பாதிப்புகளை உணர்ந்து வேலியை அகற்றக்கோரி கடை உரிமையாளர்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்ற மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Categories

Tech |