Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அலறிய தொழிலாளர்கள்… லாரியை விரட்டி பிடித்த பொதுமக்கள்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் சர்க்கிள் அருகே தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுள்ளது. இந்நிலையில் இந்த பேருந்தின் மீது பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி ஒன்று பலமாக மோதி விட்டது. இதனால் பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிப்பர் லாரியை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிப்பர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |