நாடுமுழுவதும் போக்குவரத்து சேவையை இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவுறுத்தலோடு மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சொல்லியது போலவே இந்த முறை ஊரடங்கும், அதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. ஒரு பக்கம் மாநில அரசுகள் கொரோனா பாதிப்பின் மஞ்சள் மண்டலம், பச்சை மண்டலத்தை நிர்ணயம் செய்வதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது.
ஊரடங்கில் அதிக அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் விதி முறையை பின்பற்ற வேண்டும், ஆனாலும் அவர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம். பச்சை மண்டலம் என்று சொல்லக்கூடிய பகுதிகளில் கிட்டத்தட்ட மாநில அரசுகள் முழுமையாக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்கும் அளவுக்கு தற்போது அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதே போல ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு பேருந்து மூலமாக செல்வதற்கு அனுமதி அளிக்கலாம். அது இரண்டு மாநிலங்களும் அல்லது மூன்று மாநிலங்களும் இருந்தாலும் அந்த மூன்று மாநிலங்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில் அது போன்றதே பேருந்து வசதிகளை தொடங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்கம் தெரிவித்துள்ளது.