பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து பாட்டவயலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கூடலூர் 1-ம் மைல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முன்பக்க டயர் பஞ்சராகி நடுவழியில் நின்று விட்டது. இதனால் பயணிகள் வேறு வாகனங்களில் ஏறி மீண்டும் கூடலூருக்கு சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது அரசு பேருந்தின் உதிரி பாகங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. இவ்வாறு பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பழுதான பேருந்துகளை சீரமைத்து நல்ல முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.