Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உத்தரவை நிறைவேற்றவில்லை…. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு சேவூர் கிராமியம் பாளையம் அருகே ரவிச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து திருப்பூர் 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ரவிச்சந்திரனின் குடும்பத்தினர் நஸ்டி ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தினர் நஷ்ட ஈடாக 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டுமென கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தினர் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொககையை வழங்கவில்லை. இதனால் நீதிபதி அனுராதா அரசுப் பேருந்து ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |