Categories
சினிமா தமிழ் சினிமா

“பேருந்தில் சென்ற போது என் மீது”….. ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க…. பரபரப்பை கிளப்பிய நடிகை ஆண்ட்ரியா….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பி4 யூ ஐ வி ஓய் என்டர்டைன்மென்ட் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்ட்ரியா அளித்துள்ள பேட்டியில், என் தோற்றத்தை வைத்து நான் நகரத்து மார்டன் பெண் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அரக்கோணத்தில் ஒரு சிறிய டவுனில் வளர்ந்து ஒரே ஒரு அறை இருந்த வீடு, பின்னர் இரண்டு அறைகள் இருந்த வீடு, அதன் பிறகு ஒரு அபார்ட்மெண்ட் என்று வாடகைக்கு இருந்து, பின்னர் அதே அபார்ட்மெண்டை சொந்தமாக வாங்கி படிப்படியாக வளர்ந்த குடும்பத்தை சேர்ந்தவள் தான். இதுவரை இரண்டே இரண்டு முறை தான் பேருந்தில் பயணம் செய்துள்ளேன். 11 வயது இருக்கும் போது வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்ற போது யாரோ என் முதுகில் கை வைப்பது போல இருந்தது. திடீரென அந்த கை என் டி-ஷர்ட் உள்ளே சென்றதும் பயந்து போய் இருக்கையில் சற்று முன்னே சென்று அமர்ந்து கொண்டேன். அதனைப் போல கல்லூரிக்கு ஒரு முறை பேருந்தில் சென்ற போதும் நடந்தது. அன்று முடிவு செய்தேன் இனிமேல் பேருந்தில் செல்லக்கூடாது என்று. பேருந்தில் செல்ல வேண்டாம் என்ற வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனால் பல பெண்களுக்கு அப்படி வாய்ப்பு அமைவதில்லை. இந்த மாதிரி அத்துமீறல்கள் பற்றி தான் ‘அனல் மேலே பனித்துளி’ படம் பேசியிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |