தமிழத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர்.
நேற்று பிற்பகல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தகவல் வெளியான சில மணி நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து விட்டனர். நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்ட நெரிசலாக இருந்துது. போதுமான பேருந்துகள் இல்லாததால் மக்கள் பேருந்தின் மேற்கூரைகளில் கூட பயணித்ததை காண முடிந்தது.
இந்த நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரைபேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விழுப்புரம், வேலூர், ஆரணி உள்ளிட்ட குறைத்த தூர ஊர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமல் படுத்த உள்ள நிலையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.