பேருந்து நிலையத்திலேயே டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு கண்டக்டர்கள் இல்லாமல் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நெல்லைக்கு நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் செல்வதற்கு 1.45 மணி நேரம் ஆகும் காரணத்தால் நெல்லைக்கு என்ட் டு என்ட் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து போக்குவரத்து கழகம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று என்ட் டு என்ட் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தது. இந்த பேருந்துகள் நெல்லைக்கு நாகர்கோவிலில் இருந்து 1.20 மணி நேரத்தில் செல்லும். மேலும் தினமும் 20 என்ட் டு என்ட் பேருந்துகள் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த பேருந்துகளில் பயணிக்க கண்டக்டர் டிக்கெட் வழங்கிவந்த நிலை மாற்றப்பட்டு பேருந்து நிலையத்திலேயே பேருந்துகள் புறப்படுவதற்கு முன்னர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா அச்சத்தால் குறைவான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 என்ட் டு என்ட் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு பேருந்து நிலையத்திலேயே டிக்கெட்களை வழங்கி கண்டக்டர்கள் இல்லாமல் பேருந்தை இயக்கம் நடைமுறையானத செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே பேருந்து நிலையத்திலேயே டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு பயணிகள் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கும், நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கும் விரைவில் பயணிக்கலாம்.