Categories
அரசியல் மாநில செய்திகள்

பேருந்து பயணம் இலவசம் அல்ல..! பணத்தை அண்ணன் ஸ்டாலின் கொடுக்காரு.. பெருமை பேசும் உப்பிக்க்கள் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு மகளிர்கள் பேருந்திலே கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்கிற போது, லட்சக்கணக்கில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்கிறார்கள். அதனுடைய பெயர் என்ன தெரியுமா? சாதாரணமாக படித்துவிட்டு பெரிய வாய்ப்பு கிடைக்காமல், சின்ன சின்ன வேலைக்கு போகிற பெண்கள் நிறைய பேர் இருப்பார்கள்.

வீட்டு வேலைக்கு செல்கிறவர்கள்  அல்லது சிறிய தொழிற்சாலைகளிலே அன்றாட வேலைக்கு செல்லக்கூடிய இளம் பெண்கள், அதிகமாக படித்துவிட்டு ஒரு பள்ளியிலே கௌரவ விரிவுரையாளராக அல்லது தற்காலிக பணியாளர்களாக… இவர்களுக்கெல்லாம் மாத சம்பளமே ஐந்தாயிரம்,  6 ஆயிரம் மட்டும் தான். அதைக் கொண்டு வாழ வேண்டும் என்கின்ற நிலையில் இருக்கின்ற அவர்களுக்கு, பேருந்து கட்டணம் ஒரு சுமையாக இருக்கிறது என்கின்ற போது,

அந்த பெண்களிடம் ஒரு அண்ணனாக… ஒரு பிள்ளையாக… நான் இருக்கிறேன் என்று சொல்லி அந்த சுமையை குறைக்கிறவர் தான் இன்றைய முதலமைச்சர் தளபதி அவர்கள். நீங்கள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்றால், அது இலவச பயணம் அல்ல. உங்களுக்காக உங்கள் அண்ணன் முதலமைச்சரின் அரசாங்கம் போக்குவரத்து துறைக்கு அதை தந்து விடுகிறது. பல பேருக்கு அது புரிவதில்லை. இலவசமாக மின்சாரம் விவசாயிகளுக்கு தருகிறோம் என்று சொன்னால்,  அரசாங்கம் மின்வாரிய துறைக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விடுகின்றது.

மாணவர்கள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பள்ளிக்கு செல்கிறார்கள் என்றால், அதற்கான கட்டணத்தை அரசு போக்குவரத்து துறைக்கு செலுத்தி விடும். இல்லாவிட்டால் அவைகள் எல்லாம் திவால் ஆகிவிடும். இதனுடைய நோக்கம் என்ன ? சாதாரணமான ஏழை குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள்,  அன்றாட உணவிற்கு வழி இல்லாதவர்கள்,  பேருந்துக்கு செலவழித்து படிக்கப் போக முடியாது என்பதனால், பாதியில் படிப்பை நிறுத்தியதை நிறுத்தி,  எல்லோரையும் படிக்க வைத்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என பெருமிதம் கொண்டார்.

Categories

Tech |