தமிழகம் முழுவதும் இன்று பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று நான்காம் கட்ட தளங்களுடன் கூடிய பொது முடக்கம் அமலாக்கு வந்தது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நான்காம் கட்ட பொது ஊடகம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மாநிலம் முழுவதும் இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை நேற்றைய போக்குவரத்து கழகங்கள் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை தமிழகம் முழுவதும் தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் 161 நாட்களுக்குப்பின் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறி பயணம் செய்கின்றனர்.