தமிழகத்தில் பேருந்துகள் நாளையும் ஓடாது என்ற அறிவிப்பால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒரு சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் எச்சரித்தது. மேலும் ஏற்கனவே விடுமுறை எடுத்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தது. இதையடுத்து முன்னதாக போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1000 இடைக்கால நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் முதல்வர் அறிவித்துள்ள ரூ.1000 இடைக்கால நிவாரணம் ஏற்கக் கூடியதாக இல்லை. எனவே போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நாளையும் தொடரும் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஸ்டிரைக் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பெரிதும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த சூழலில் நாளையும் போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.