இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட மிக முக்கியமான நகரங்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், இந்த செயல் உணவு பசியை போக்கிக் கொள்வதற்காக அல்லாமல் வணிக நோக்கில் அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டின் டிஐஜி அஜித் ரோஹனா என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வணிக நோக்கில் பிச்சை எடுக்கும் இதுபோன்ற செயல்கள் குற்றம் என்பதால், பிச்சை எடுப்பதும், பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் இடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று அவர் அறிவித்துள்ளார். எனவே இனி வரக்கூடிய நாட்களில் பிச்சை எடுப்பவர்கள் அல்லது அவர்களுக்கு பிச்சை அளிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.