Categories
உலக செய்திகள்

“5000 பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அமெரிக்க தொழிலதிபர்!”.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் ஒரு தொழிலதிபர் 5000 பெண்களோடு தொடர்பு கொண்டிருந்ததாக பெண் ஒருவர் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் சிலிகான் நகரத்தில் Michael Goguen என்ற தொழிலதிபர், சொந்தமாக பல நிறுவனங்களை நிர்வகித்து வருவதால், நாட்டின் பிரபல கோடீஸ்வரராக உள்ளார். எனினும், இவர், தொடக்க காலத்தில் Sequoia capital என்ற நிறுவனத்தில் பணியாற்றி, அதன்பின்பு அந்நிறுவனத்திலேயே பங்குதாரராக மாறும் அளவிற்கு வளர்ச்சியடைந்தார்.

ஆனால், அந்நிறுவனத்தில் பணியாற்றிய பல பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதால் அந்நிறுவனம் அவரை நீக்கியது. அதன் பின்பு அவரே சொந்த நிறுவனம் ஒன்றை தொடங்கி, தற்போது மிகப்பெரிய தொழிலதிபராக முன்னேறியிருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவரின் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் நான்கு பேர், காவல்துறையினரிடம் இவர் குறித்து பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

அதில் ஒரு பெண், Michael Goguen 5,000 பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சி புகாரை தெரிவித்தார். மேலும், Michael, எக்ஸெல் ஷீட்டில் தான் தொடர்பு வைத்திருக்கும் 5000 பெண்களின் விவரங்களை சேமித்து, ஒரு அறைக்குள் வைத்திருக்கிறார் என்றும் புகாரில் கூறப்பட்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, Michael மீது 135 பக்கம் உடைய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த, அதிகாரிகள், அவரிடம் 800 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக கேட்டுள்ளனர்.

Categories

Tech |