Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வியாபாரி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோழிக்கடை வியாபாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள பாசிபட்டினத்தில் முஜமீல்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொண்டிக்கு சென்ற முஜமீல் இருசக்கர வாகனம் மூலம் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் முஜமீல் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்து. இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.பி.பட்டிணம் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |