தற்போது பிசியாக நடித்து வரும் நடிகர் சிம்பு அடுத்ததாக ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உடல் எடையை குறைத்து மீண்டும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. மிக குறுகிய காலத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு அதை ரிலீஸ் செய்து விட்டார். அப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
ஈஸ்வர் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, பத்து தல மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஒரு படம் என்று பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் அப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்தால் மட்டுமே உண்மையானதாக இருக்கும்