பட்டர் முறுக்கு
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – 1 1/2 கப்
உளுந்து மாவு – 1/2 தேக்கரண்டி
கடலை மாவு – 1/4 கப்
சீரகம் – 1 மேசைக் கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 2 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு , கடலை மாவு , உளுந்து மாவு , சீரகம் , பெருங்காயம் ,உப்பு , வெண்ணெய் சேர்த்து கலந்து கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் .முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, தேவையான அளவு மாவை போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து பொன்னிரமாக சுட்டு எடுத்தால் மொறு மொறுப்பான பட்டர் முறுக்கு தயார்!!!