ரயில் நிலையங்களில் நாளை முதல் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வேதுறை அறிவித்திருக்கிறது.
ரயில் சேவை என்பது கிட்டத்தட்ட தொடங்கி இருக்கக் கூடிய நிலையில் அந்த டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைன் மட்டும்தான் பெறக்கூடிய முறை இருந்து வருகிறது. இது நிறைய பேருக்கு பெரும் சவாலான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆன்லைன் டிக்கெட் வாங்கிய முடியாத நிலை இருந்து வருவதால் அதனை சரிசெய்வதற்காக இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட்களை நேரடியாகவே சென்று வாங்கிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அந்த ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டிருக்கும் கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டு களை பெற்றுக்கொள்ளலாம் என்று தற்போது மிக முக்கியமான அறிவிப்பாக வந்திருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் மண்டலங்களுக்கும் இந்த சுற்றறிக்கை என்பது அனுப்பப்பட்டிருக்கிறது. 22 ஆம் தேதி நாளை முதல் இந்த டிக்கெட் வழங்கும் முறை செயல்படும் என்றும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து ரயில்நிலைய கவுன்டர்களில் பயணிகள் பயணச் சீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.