Categories
சற்றுமுன் தேனி மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜைக்கு வாங்க…. ரூ.200 பணம், உணவு இலவசம்… அசத்திய திமுக வேட்பாளர் …!!

தேனி மாவட்டம் மாவட்டம் கம்பத்தில் ஆயுத பூஜையை ஒட்டி சீமான் என்பவர் இனாமாக பணம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கியதுதை அதனை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விழாக்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

கம்பம் 22வது வார்டு ராமையா கவுண்டம் பகுதியில் அதிகாலை முதல் ஒரு வீட்டு முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி இருந்ததை காணமுடிந்தது. இந்த கூட்டம் குறித்து கேட்டதற்கு சரஸ்வதி பூஜை கொண்டாடுவதாகவும், இதற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் ஒரே இடத்தில கூடி இருந்தனர்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் இறந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்ட சீமான் என்பவர் தான் இந்த விழாவை நடத்துவதாகவும்,  இவர் இந்த பூஜைக்கு வருபவர்களுக்கு தலா 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கொடுத்து வருவதாகவும், மேலும்  உணவு பொட்டலங்களையும் இனாமாக கொடுக்கபட்டதாக தெரிந்தது.

இனாமாக கொடுக்கப்பட்ட பணம் மற்றும் உணவுப் பொட்டலங்களை வாங்குவதற்கு நூற்றுக்கணக்கான குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் என எந்தவித தனிமனித இடைவெளியும் இன்றி கூட்ட நெரிசலில் முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை, விதிமுறைகளை வகுத்து இருப்பினும் கூட கட்டுப்பாடுகள் இன்றி கூட்ட நெரிசலை நாம் காண முடிந்தது.

Categories

Tech |