Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழந்தையை கையில் வாங்காமல்”… தனது தாயார் பெயரை வைத்தார் கமல்..!!

சாதிபவர்களைப் பார்த்து வாக்களியுங்கள். ஜாதியை பார்த்து வாக்களிக்க வேண்டாம் என்று கோவை துடியலூரில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக களத்தில் இறங்கி போட்டியிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் நல்ல வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே நம்பிக்கையோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். கோவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வந்தார்.

இதில் ஒரு பகுதியாக துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே மதியம் ஒரு மணிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் குழந்தையை கொடுத்து பெயர் வைக்கச் சொல்லி கூறினார். அதற்கு கமல் கொரோனா காலத்தில் கூட்டத்தில் குழந்தையை எடுத்து வரவேண்டாம் என்று அறிவித்ததோடு, குழந்தையை கையில் வாங்காமல் தனது தாயார் பெயரான ராஜலட்சுமி என்பதை அந்த குழந்தைக்கு சூட்டினார்.

Categories

Tech |