தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு கூட்டம் தேமுதிக கட்சி தலைமை அலுவலத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை நடைபெற்றது. இதில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா உட்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தொண்டர்களிடம் பேசிய பிரேமலதா, தொண்டர்களின்விருப்பத்திற்காக ஒரு கூட்டணி அமைத்து கூட்டணி தர்மத்தை காப்பாறினோம்.
கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்பது எல்லாருக்கும் தெரியும்.கூட்டணி கட்சி என்பதற்காக குட்ட குட்ட குனியமாட்டோம் என்று அதிமுகவுக்கு பொடி வைத்து விமர்சித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் ,
எல்லாரும் அவரவர் கட்சியை வளர்ப்பதற்கு முயற்சி எடுப்பார்கள் , அதில் தப்பில்லை. அதிமுக என்பது ஒரு மிகப்பெரிய ஆலமரம். இதில் பல பறவைகள் வந்து பழத்தை சாப்பிடும் அது பற்றி தொடர்களுக்கும் , தலைவர்களுக்கு கவலை இல்லை. நாங்களும் தட்ட தட்ட பணிய மாட்டோம் என்று தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள் இப்படி ஒரு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் முதல்வர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.