அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, இன்றைய அதிமுக அணியில் எடப்பாடி பழனிச்சாமி பார்த்தீர்களென்றால், யாருமே இருக்கக்கூடாது; அவர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொல்லுவர். ஓபிஎஸ் பார்த்தீர்கள் என்றால், சசிகலா வந்தால் நம்மள கவிழ்த்து விடுவார் என்ற பயம் இருக்கும். எனக்கு அது போன்று எதுவும் கிடையாது. ஓபிஎஸ்ம் வாங்க, இபிஎஸ்சும் வாங்க, சசிகலாவும் வாங்க….
எல்லாரும் அண்ணா திமுக தொண்டர்கள்…. எம்ஜிஆர் காலத்தில் இருந்து இந்த இயக்கத்தோடு ஒன்றியவர்களுக்கு நம்ம உறுப்பினர் அட்டைகள் கொடுப்போம். நீங்கள் ஆளுக்கு ஒரு கூட்டத்தை சேர்த்து அவர்களுக்கு மட்டும் உறுப்பினர் அட்டைகளை கொடுத்து அவர்களை வைத்து….. ஒரு உதாரணத்திற்கு கேட்கிறேன்…. இன்றைய முதலமைச்சர் இடைக்கால முதலமைச்சர் தான் தேர்தல் வரும் போது….
இன்றைய முதலமைச்சர் தேர்தல் வரும்போது இடைக்கால முதலமைச்சர்தானே…. அப்போ அவர் வந்து தமிழ்நாடு முழுக்க திமுக காரர்களுக்கு மட்டும் வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்து அவர்கள் மட்டும் ஓட்டு போட்டு ஒரு சட்டமன்ற தேர்தல் நடந்தது என்றால் பத்திரிகையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அண்ணா திமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பொதுமக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி செய்கிறார் என தெரிவித்தார்.