தனக்கு பாதபூஜை செய்ய வாருங்கள் என்று மின்னஞ்சல் ஒன்றை நித்தி வழங்கியுள்ளார்.
கைலாசத்தின் அதிபர் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நித்தியானந்தா எதாவது ஒரு நாட்டில் இருந்து கொண்டோ அல்லது யாருக்கும் தெரியாதவாறு ஏதேனும் ஒரு மூலையில் இருந்து கொண்டு அவருக்கு தோன்றியதெல்லாம் பேசி சர்சைக்கு பெயர்போனவர்.
அண்மையில் புதுக்கதையை அளந்து விட்டுள்ள நித்தி , அமெரிக்காவில் இருப்பதாக சொல்லிய ஒரு தீவை கைலாசநாடு என்று அறிவித்தார். கைலாசாவிற்கு அனைத்து நாடுகளிலும் தூதரகம் அமைக்கும் பணி ஈடுபட்டு வருவதாக தெரிவித்த நித்தி நான் அனைத்து பகுதிக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கைலாசா நாட்டின் அதிபர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட நித்தியானந்தா மா பிரேம ஆத்மா என்பவரை கைலாச நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்று அறிவித்தார்.இதையடுத்து நித்தி தெரிவித்த கருத்து தான் மாஸ்.
அதில் எனக்கு பாத பூஜை செய்ய வேண்டுமென்றும் , செய்ய விரும்புவோர் வெளியுறவுத்துறை அமைச்சரை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். அதோடு இந்திய அரசுக்கே சவால் விடுக்கும் வகையில் நான் கைலாசா நாட்டின் அரசன் என்பதால் என்னை யாரும் நெருங்க முடியாது என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.