Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.3,00,00,000 சொத்து…. ஏமாற்றி வாங்கிவிட்டு சோறு கூட போடல…. மகனின் டார்ச்சரால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் 3 கோடி ரூபாய் சொத்துகளை ஏமாற்றி எழுதி வாங்கி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வயதான தம்பதி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.

சென்னை போர்ச்சுகீசிய தெருவை சேர்ந்த 75 வயதான குமாரசாமி- மாலா தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் சொத்துக்களும் வீடும் உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு படிப்பறிவு இல்லாத என்னை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்ட மகன் தீனதயாளன் மனைவியோடு சேர்த்து சரியாக உணவு கூட அளிக்காமல் நாள்தோறும் தங்கள் இருவரையும் அடித்து துன்புறுத்துவதாக, குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மூன்று கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தும் பிளம்பிங் வேலை செய்து பிழைத்து வருவதாக வேதனை உடன் கூறியுள்ளார் குமாரசாமி. முதியவர் குமாரசாமியை அவரது மகன் தீனதயாளன் ஆபாசமான வார்த்தைகளால் வசைபாடி மிரட்டும் செல்போன் ஆதாரங்களும் போலீசில் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |