Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மேடைக்கு வாங்க….”துண்டு சீட்டு இல்லாம நான் வாரேன்”…. தமிழிசை பதிலடி..!!

நான் துண்டு சீட்டு இல்லாமல் பேசுகின்றேன் சவாலுக்கு ஸ்டாலின் தயாரா என்று தமிழிசை ஸ்டாலினை சாடியுள்ளார்.

நெல்லையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது ,  நீங்கள் தூண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேச மாட்டிங்களே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு  எதையும் ஆதாரத்தோடு சொல்லனும். வாய்க்கு வந்தபடி சொல்லிட்டு போக கூடாது. ஆதாரம் இல்லாமல் தமிழிசை மாதிரி ,H.ராஜா மாதிரி பேச கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Image result for tamilisai soundararajan  stalin

ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடியாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை கூறும் போது , ஒரு துண்டு சீட்டு இல்லாமலும் புள்ளிவிவரங்களை என்னால் பேச முடியும். ஒரு மணி நேரம் இல்ல , மூணு மணி நேரம் என்றாலும் பேசுவேன். அண்ணன் மேடைக்கு வந்து பேச தயாரா? எந்த சீட்டும் இல்லாமல் நான் பேச தயார் என்பதை சொல்கிறேன். எல்லா தலைவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. கொஞ்சம் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும் என்று தமிழிசை ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |