கிரிக்கெட் விளையாட்டின்போது மைதானத்தில் மழை குறுக்கிட்டாலோ அல்லது சரியான வெளிச்சம் இல்லாததாலோ, ஏன் நேற்று போல் பிட்ச்சில் ஈரம் அதிகமாக இருந்தால் கூட கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவிடும். சில நேரங்களில் நேரங்கள் தள்ளிப் போடப்படும். ஆனால், மும்பையில் நடந்த கர்நாடகா – மும்பை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் பாம்புகள் வந்ததால், ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டுள்ளது.
இதையடுத்து மைதானத்திற்கு பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு, பாம்புகள் பிடிக்கப்பட்ட பின் ஆட்டம் தொடங்கியுள்ளது. இந்த ரஞ்சி டிராபி தொடரில் மைதானத்திற்குள் பாம்புகள் புகுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆந்திரா – விதர்பா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது பாம்புகள் மைதானத்திற்குள் இருந்து பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.