உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF) தடகள ஆணைய உறுப்பினராக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 2முறை பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF )தடகள ஆணைய உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் உறுப்பினர் பதவியில் பி.வி.சிந்து 2025 -ஆம் ஆண்டு வரை நீடிப்பார்.
இதைதொடர்ந்து பிவி சிந்துவை தவிர , அமெரிக்காவின் ஐரிஸ் வாங், நெதர்லாந்தின் ராபின் டாபலிங், இந்தோனேசியாவை சேர்ந்த கிரேசியா போலி, கொரியாவை சேர்ந்த கிம் சோயியாங் மற்றும் சீனாவின் செங் சி வெய் ஆகியோரும் தடகள ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து புதிய ஆணையம் கூடிய விரைவில் இந்த 6 உறுப்பினர்களில் ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்யும்.