சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் 2027ஆம் வருடத்திற்குள் சீன நாட்டின் ராணுவம் அமெரிக்க நாட்டிற்கு சமமாக உலகின் சிறந்த ராணுவமாக மாற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
சீன நாட்டின் ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவினரிடம் அதிபர் நேற்று கலந்துரையாடியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சீன நாட்டின் ராணுவம் தோன்றி 94வது வருட விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், அதிகாரிகள், ஆயுத படையினர், காவல்துறையினருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்பே தீர்மானித்தபடி, வரும் 2027-ஆம் வருடத்திற்குள் அமெரிக்க அரசின் ராணுவத்திற்கு சமமாக தங்கள் நாட்டின் ராணுவம் உலகிலேயே மிக சிறப்பான ராணுவமாக மாற அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும். காலத்திற்கு தகுந்தவாறு மாற்றங்கள் மேற்கொள்ளுதல், சீன நாட்டு படையின் வளர்ச்சிக்கு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.