மலையாளத்தில் மிகவும் பிரபல நடிகரும் எழுத்தாளருமான மடம்பு குஞ்சுகுட்டன் கொரோனாவால் காலமானார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பல அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்து கொண்டு வருகின்றனர். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் செய்தி வந்த வண்ணமே உள்ளது. கொரோனா தொற்று பல உயிர்களை காவு வாங்கி வருகின்றது.
தற்போது பிரபல மலையாள நடிகரும், எழுத்தாளருமான மடம்பு குஞ்சுகுட்டன் கொரோனாவால் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார். மோகன்லாலின் Aaraam thampuran, Parinamam உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைக்கதை எழுத்தாளரான இவர் கருணம் படத்தின் கதைக்கு தேசிய விருது பெற்றவர். மகாபிரஸ்தானம் நாவலுக்காக கேரளா சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.