Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக 14 தொகுதி முன்னிலை…. அதிமுக 08 தொகுதி முன்னிலை..!!

சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 14 மற்றும் அதிமுக 08 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது 

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. இதோடு  சேர்த்து 22 சட்ட பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல்   நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி  18 தொகுதிகளுக்கும், மீதமுள்ள   4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

Seithi Solai

இந்திய அளவில் பாஜக 338 தொகுதிகளில் முன்னிலை வகித்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 91 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தமிழக  சட்ட பேரவை இடைத்தேர்தலில் திருவாரூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்,  பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், குடியாத்தம், ஆண்டிபட்டி, ஆம்பூர், தஞ்சாவூர், பெரியகுளம், ஓட்டப்பிடாரம், ஓசூர், பரமக்குடி ஆகிய 14 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.  அதை தொடர்ந்து  பாப்பிரெட்டிபட்டி, சாத்தூர்,  சோளிங்கர்,  விளாத்திகுளம், மானாமதுரை, சூலூர், அரூர், நிலக்கோட்டை ஆகிய 08 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

Categories

Tech |