MGR_ஆல் தான் இன்று நாங்கள் வீரத்தோடு இருக்கின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் கொண்டார்.
அதிமுகவின் நிறுவனரும் , தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான MGR_யின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது வருகின்றது. மாநிலம் முழுவதும் உள்ள அதிமுகவினர் இதனை மலர் தூவி அனுசரித்து வருகின்றனர். அதிமுக சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது , இன்று எம்.ஜி.ஆர் மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் அவரின் புகழ் குறையவில்லை. இன்னும் 100 ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் கருத்துகள் நீடிக்கும். நாங்கள் எல்லாம் இன்று வீரத்தோடு இருக்கின்றோம் என்றால் அதற்க்கு எம்.ஜி.ஆர் தான் காரணம் என்று அமைச்சர் கூறினார்.