Categories
தேசிய செய்திகள்

மக்களே…. உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா…? மிஸ் பண்ணாம இதப்படிங்க..!!

உங்கள் வீட்டில் அருகில் இருப்பவர்கள் அல்லது உங்கள் உறவினர்களில் யாராவது ஏதேனும் நோய் அல்லது கொரோனாவால் உயிரிழந்திருந்தால் வங்கிக் கணக்கு விவரங்களை பார்க்க வேண்டும். 2019 ஏப்ரல் 1 முதல் 2020 முதல் மார்ச் 31 வரை வங்கி 12 ரூபாய் அல்லது 330 ரூபாய் பிடித்திருந்தால் அதை குறிக்கவும். பின்னர் இறந்தவர்களின் உறவினர்களிடம் இதைக் கூற வேண்டும். அவர்கள் வங்கிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு காப்பீட்டு தொகைக்கான உரிமை கோரலை சமர்ப்பிக்க சொல்லவேண்டும்.

உங்களைச் சுற்றி இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் 90 நாட்களுக்குள் அந்த காப்பீட்டை கூறும்படி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பது நல்லது. 2015ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான மக்களின் வங்கி கணக்கில் இருந்து இரண்டு மலிவு காப்பீட்டுத் திட்டங்களை இந்திய அரசு வழங்கியது.

அது என்னவென்றால்:

1 – பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (பி. எம். ஜே. ஜே. பி. ஒய்) ரூ.330 / –

2 – பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா பீமா யோஜனா (பி. எம். எஸ். பி. ஒய்) ரூ.12 / –

பெரும்பாலான மக்களுக்கு இந்த படிவத்தை வங்கியாளர்கள் பூர்த்தி செய்துள்ளன. மேலும் இந்த இரு காப்பீட்டின் வருடாந்திர தவணையும் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து அளிக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த முயற்சி மூலம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும்.

Categories

Tech |