விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பந்தல்குடி ஊராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, மெயின் பஜார் போன்ற 12 வார்டுகளிலும் தீயணைப்பு வாகனத்தின் நவீன இயந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு பணியை ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி பத்திரிநாத் தொடங்கி வைத்துள்ளார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி, மண்டல துணை வட்டாட்சியர் துறை கண்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.