Categories
அரசியல் மாநில செய்திகள்

அயோக்கிய பயலே, திருட தாண்டா வாற….. நாய், பூனை கதை சொல்லி… ஆட்சியாளர்களை வெளுத்த சீமான்!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓராண்டா?  இரண்டா 50 ஆண்டுகளுக்கு மேலாக…  கற்றறிந்த சான்றோர்களே… பள்ளி,  கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கின்ற என் பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே….  ஒரு பூனை பாலை நீங்கள் காய்ச்சி சட்டியில் வைக்கும் போது…. சூடாக நீங்கள் வைத்து விட்டீர்கள் என்றால் ? அது பசியில் வந்து குடிக்கும். குடிக்கும் போது அது சுட்டு விட்டால்,  வெள்ளையாக எதை பார்த்தாலும் தன் வாழ்நாளில் கிட்ட வராது.

ஒரு தடவை சுட்டது, வெள்ளையாக இருந்துச்சு. அதுபோல் இதுவும் சுடுமோ என்று அருகில் வராது. ஆனால் 50 ஆண்டு காலமாக இந்த அயோக்கியர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏமார்ந்து கொண்டே இருக்கிறீர்கள். ஒரு பூனைக்கு இருக்கிற  அறிவு கூட நமக்கு இல்லை. ஒரு நாய் மதில் சுவர் கிட்ட நிக்குது. திருடன் சுவர் ஏறி குதிக்கவா ?  போகவா ? என்று நிற்கிறான். நாய் அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கின்றது.

இந்த நாய் நல்லா நாயாக இருக்கும் போல…. அமைதியாக இருக்கிறதே என்று திருடன் பார்க்கிறான். டப்புன்னு உள்ளே குதிச்சுட்டான்.  நாய் அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தது. இடுப்பில் இருந்த ஒரு பையை எடுத்தான். ஒரு கோழி காலை தூக்கி திருடன் நாய்க்கு அப்படியே போட்டான். கோழி காலை பிடிக்கவில்ல, திருடன்  காலை கவ்விட்டு.

ஹேய் கழுத… இவ்வளவு நேரம் நல்லாதானே கம்முன்னு இருந்த அதை நம்பி தானே,  நான் குதித்து உள்ளே போனேன். இப்படி கடிச்சுபோட்டியே அப்படின்னு நினைச்சான். ஹேய் நீ இவ்வளவு நேரம்…. என் எஜமானுக்கு சொந்தக்காரனோ, தெரிந்தவனோ..  எதற்கு வருகிறாய் ? என்று நினைத்தேன். அதனால் நான் பேசாமல் இருந்தேன்.  நீ எலும்பு துண்டை போட்டால், அயோக்கிய பயல, திருடு தாண்டா வாற .. அதனால் தான் கடித்தேன் என்றுது நாய் என கதையை சொன்னார்.

அதே போல தான் இந்த ஆட்சியாளர்கள். ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கொடுக்கும்போது இவன் திருடன். திருடத்தான் நமக்கு காசு தருகிறான். நாய்க்கு போட்ட எலும்பு துண்டு போல, நமக்கு போடுகிறான் என்று ஏன் மான உணர்வும், இன உணர்வும் கொண்ட,  தன்மானமிக்க தமிழர்களுக்கு அந்த உணர்வு வரவில்லை என வேதனைப்பட்டார்.

Categories

Tech |