தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் காட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பறக்கும் படையினர் ஓட்டுக்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக எல்லைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை இந்த மாதத்தில் 22ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போது அரசியல் கட்சிகள் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.