விருதுநகர் மாவட்டத்தில் டிராக்டரில் கொண்டு சென்ற வைக்கோல்கள் மின்வயரில் உரசி தீ பிடித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது நெல் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நெல் அறுவடை முடித்த விவசாயிகள் அதன் வைக்கோல்களையும் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து பகுதியை சேர்ந்த வைரம் என்ற விவசாயிக்கு சொந்தமான வைக்கோல்களை, மதுரையில் உள்ள தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த முகமது என்பவர் வாங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து டிராக்டர் மூலம் வைக்கோல்களை ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வைக்கோல் மின் வயரில் உரசி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிராக்டர் டிரைவர் உடனடியாக வைக்கோல்கள் அனைத்தையும் கீழே இறக்கியுள்ளார். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கொண்டு சென்ற வைக்கோல் அனைத்தும் தீயில் கருகியுள்ளது.