எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையால் தாய் மகள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் வண்ணிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர். இவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தார்.அப்போதும் அங்கு இவருக்கு கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமமூர்த்தி அஞ்சலியை மனைவியாக ஏற்றுக் கொண்டு ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்தனர்.
ராமமூர்த்தியின் உறவால் அஞ்சலியின் குடும்பத்தினர் சண்டையிட்டு வந்துள்ளன. இதனால் ராமமூர்த்தி தனது சொந்த ஊருக்கு அஞ்சலியையும் அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்து வந்தார். அஞ்சலியின் 13 வயதுடைய இரண்டாவது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அஞ்சலி தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அஞ்சலி இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் தெரியவந்தது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் வளர்ப்புத் தந்தையான ராமமூர்த்தி என்பது. அஞ்சலி வீட்டில் இல்லாதபோது சிறுமியை ராமமூர்த்தி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அச்சிறுமி வெளியில் யாரிடமும் சொல்லவில்லை.
சிறுமியின் ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன மருத்துவர்கள் ராமமூர்த்திக்கு அஞ்சலிக்கும் ரத்தப் பரிசோதனை செய்தனர். அதில் அவர்களுக்கும் எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.