Categories
தேசிய செய்திகள்

சூனியக்காரி என மக்களால் விரட்டப்பட்ட குடும்பம்… குடும்பத்திற்கு செய்த கொடுமையை மறந்து… பாதித்தவர்களுக்கு உதவும் இளம்பெண்…!!!

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சூனியக்காரி என்று துரத்திய கிராம மக்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து உதவி செய்கிறார் அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கிராமத்தில் 20 வருடத்துக்கு முன்பு சூனியக்காரி என்று கூறி தாயையும் மகளையும் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து அந்த குடும்பம் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்று தங்கியிருந்தது. தன்னுடைய கிராமத்தில் மக்கள் கொரோனாவால் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கிறார்கள் என்பதை தெரிந்த அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் வாடகை வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்று கிராம மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது: “தனக்கு பத்து வயது இருக்கும் போது எனது தாய் தன்னை படிக்க வைத்ததால் சூனியக்காரி எனக்கூறி தன்னையும் தனது தாயையும் இவர்கள் விரட்டிவிட்டனர். தற்போது இந்த கிராமமே மூச்சுத்திணறல் காரணமாக உயிருக்கு போராடும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அநியாயத்தை மறந்து தான் இவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்” என்று அவர் தெரிவித்தார்

Categories

Tech |