Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BYE BYE போட்ட தமிழகம்…! மழைக்கு NO, புயலுக்கு NO… வானிலை சொன்ன அப்டேட் …!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு பருவ மழையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில்  இயல்பான அளவை ஒட்டி தான் தற்போது வரைக்கும் மழை கிடைத்துள்ளது.  கடந்த ஆண்டு எல்லாம் இயல்பை விட அதிகமான மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டும் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை அளவு இயல்பான அளவில் தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட வடகிழக்கு பருவமழை  இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதால் இனிமே ஏதாவது புதிதாக புயல் மாதிரி உருவாகி நம்மை கடந்து சென்று மழை பொழிவை கொடுப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக தான் இருக்கு. இப்போ நகர்ந்து வரக்கூடிய இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கூட புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு கிடையாது.

ஏனென்றால் இலங்கைக்கு மிக அருகில் அது நோக்கி வந்து கொண்டிருப்பதால் அது புயலாக வலு பெறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது. ஒருவேளை அது கடலிலே  செல்லும் பட்சத்தில் வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இருந்திருக்க கூடும். ஆனால் இது இலங்கையை கடந்து குமரி கடலை நோக்கி செல்வதால் புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக தான் இருக்கிறது.

இதனால் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள்,  வடக்கு உள் மாவட்டங்கள் இதனால பெரும் அளவு மழைக்கு வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது. ஓரிரிடங்களில் மிதமான மழை மட்டும் பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையில் சொல்லி இருக்கிறாங்க.

Categories

Tech |