ரஷ்யாவின் தடுப்பூசி இன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பதே இதனை சரி செய்வதற்கான ஒரே வழி என்பதால், அதனை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்,
கொரோனாவை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக முதல் முறையாக ரஷ்யா தனது தடுப்பூசி வினியோகத்தை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசியானது இன்று முதல் வழங்கப்படும். நாட்டில் உள்ள 85 பிராந்தியங்களுக்கு தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. முதல் வினியோகத் திட்டத்தின் படி மிகவும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளது.