அமெரிக்காவில் ட்ரம்ப் நீக்கிய முக்கிய இரண்டு நபர்களை ஜோ பைடன் மீண்டும் நியமித்துள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு தேர்வாகியுள்ள நிலையில் இருவரும் முறைப்படி 2021 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி அதிபர்களாக பதவி ஏற்கிறார்கள். இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவில் குளறுபடி என்றும், எங்கள் வெற்றியை திருடி விட்டார்கள் என்றும், தொடர்ந்து அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். இதனிடையே புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள 10 பேர் கொண்ட சிறப்பு பிரிவினை அமைத்துள்ளார். அதனை வழிநடத்த டிரம்ப்பால் நீக்கப்பட்ட முக்கிய இரண்டு நபர்களை நியமித்துள்ளார் பைடன். இந்திய வம்சாவளி மருத்துவர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர்களான விவேக் மூர்த்தி மூர்த்தியை 2017இல் பதவியேற்ற நான்கு மாதங்களுக்குள் நீக்கம் செய்யப்பட்டார்.
அறுவை சிகிச்சை தலைமை நிபுணராக பணியாற்றிய இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தியை… கடந்த 2017ல் டிரம்ப் அதிபராக பதவியேற்ற நான்கே மாதங்களில் நீக்கினார். அதேபோல குளோரோக்குயின் மருந்து தொடர்பாக ட்ரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்த போது… அது தொடர்பாக விமர்சித்ததற்காக தடுப்பூசி நிபுணரான டாக்டர் ரிக் பிரைட் நீக்கப்பட்டார். அதேபோல அமெரிக்க சுகாதார பிரிவில் ட்ரம்ப்புக்கு எதிராக செயல்பட்டவர்கள், டிரம்ப்பை விமர்சித்து சிக்கிக் கொண்ட பலரும் ஜோ பைடனில் புதிய சிறப்பு பிரிவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.