பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது .
இந்த கொடூர குற்றவாளிகள் 4 பேரின் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் , பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இதையடுத்து இந்த வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசு அரசனை வெளியிட்டது . இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் கல்லூரி முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் உள்ளன.
பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு! இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா?
குற்றவாளிகளை காப்பாற்ற தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம் pic.twitter.com/o219mimN1Z
— M.K.Stalin (@mkstalin) March 14, 2019
இது பாதிக்கப்பட்ட மாணவிகளை மிரட்டும் வகையில் புகார் அளித்தது யார் என்று குற்றவாளிதரப்புக்கு தெரிவிக்கும் வகையில் இடப்பெற்றுள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் தெரியக்கூடாது என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டலை தமிழக அரசு மீறி விட்டது என்று பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.