பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு அமமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது .
இந்த கொடூர குற்றவாளிகள் 4 பேரின் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் , பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இதையடுத்து இந்த வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசு அரசனை வெளியிட்டது . இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் கல்லூரி முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் உள்ளன.
இது பாதிக்கப்பட்ட மாணவிகளை மிரட்டும் வகையில் புகார் அளித்தது யார் என்று குற்றவாளிதரப்புக்கு தெரிவிக்கும் வகையில் இடப்பெற்றுள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் தெரியக்கூடாது என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டலை தமிழக அரசு மீறி விட்டது என்று பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புகார் அளித்த மாணவியின் பெயரை அரசாணையில் வெளியிட்டதுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது .