சி.ஐ.டி.யு. கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரன் சிலை அருகில் சி.ஐ.டி.யு. மாவட்ட குழு சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் சி.ஐ.டி.யு பனியன் சங்க செயலாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசு பொதுத்துறை பங்குகள் மற்றும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், சாலையோர வியாபாரிகள், சங்க செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சி.ஐ.டி.யு. கட்சியினர் மத்திய அரசு நடவடிக்கைகளை கண்டித்து போராட்டத்தை நடத்தினர்.