Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M துன்பப்பட்டாங்க…! வேதனையோடு சொன்ன முதல்வர்…. அப்படிலாம் இல்லைனு மறுத்த ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ராணி மேரி கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்காக  இரவு 12 மணிக்கு நான்  வேளச்சேரியில் இருக்கிறேன். அப்போது வேளச்சேரியில் தான் எனது வீடு, போலீஸ் வந்துவிட்டது. எதுக்கென கேட்டேன். கைது பண்ண வந்திருக்கிறோம் என்று சொன்னாங்க, எதுக்குன்னு கேட்டேன்.

ராணி மேரி கல்லூரியில் போராடிக் கொண்டிருக்கக்கூடிய மாணவிகளை எல்லாம் நீங்கள் கேட்டு ஏறி குதித்து உள்ளே போயிட்டு வந்து இருக்கீங்க. அதுக்காக கைது, வழக்கு என்னன்னா கேட்டு ஏறி குதிச்சதாக வழக்கு. ஆக கைது செய்து எங்களைக் கொண்டு போய் சிறையில், அது எந்த சிறை என்று கேட்டால் பொன்முடி போன்றவர்கள் எல்லாம் கைது செய்து சிறையில் போட்டாங்க. கடலூர் சிறையில் கொண்டு போய் அடைத்தாங்க. ஒரு மாத காலம் சிறையில் இருந்தோம்.

இங்ககூட கல்லூரி முதல்வர் அவர்கள் துன்பப்பட்டாங்க என்று சொன்னாங்க. ஆனா நாங்க துன்பப்படவில்லை, துன்பமாக கருதவில்லை, மகிழ்ச்சி அடைந்தோம். உங்களுக்காக மாணவிகளுக்காக அதனை நாங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம். ஒரு மாத காலம் இருந்தோம், அதில் எனக்கு என்ன பெருமை என்று கேட்டீர்கள் என்றால் நான் ஏற்கனவே சொன்னேன். ராணி மேரி கல்லூரி வளாகத்திற்கு கேப்பர் என்று பெயர், கடலூரில் கொண்டு போய் எங்களை சிறையில் போட்டாங்கல்ல.

அந்த சிறைக்கு என்ன பெயர் என்று கேட்டீங்கன்னா கேப்பர் சிறை. எவ்வளவு பொருத்தம் பாருங்க. ஆக அதனால் தான் நான் சொன்னேன். எனது வாழ்நாளில் மறக்க முடியாத எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் இந்த கல்லூரிக்காக போராடிய, மாணவிகளுக்காக போராடியதற்காக அதை நினைத்துப் பார்க்கும்போது மறக்க முடியாத சம்பவமாக என்னை பொறுத்தவரையில் அமைந்துள்ளது என நெகிழ்ந்து பேசினார்.

Categories

Tech |