தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஒரு தற்கொலை படை தாக்குதல்ல ஐந்து நபர்களை கைது செய்துவிட்டு, எந்த செக்ஷன் போட்டோம் என்று கூட சொல்லவில்லை. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதி முன்னாடி எட்டு [பேரை கோயம்புத்தூரில் போலீஸ் illegal – Legal கஷ்டடியில் வச்சிருக்காங்க. அதை காவல்துறை டிஜிபி இல்லை என்று மறுக்கட்டும்.
காவல்துறையின் மாண்பு கருதி அந்த எட்டு பேர் பெயரை இந்த பிரஸ்மீட்டில் சொல்லல. இன்னும் எட்டு பேர் கோயம்புத்தூர் மாநகர காவல்துறை கஷ்டடியில் இருக்காங்க. ஏன் அவங்க மேல UAPA கேஸ் போடல ? 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம் அவங்க வீட்டில் எடுத்த பிறகு அவங்க என்ன தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறது வாங்கி வெச்சிருந்தாங்களா ? இல்ல தெரியாம கேட்கிறேன்..
இல்ல கோலி குண்டோட போனாரு, ஆனால் தீவிரவாத தாக்குதல் இல்லை என்று நம்முடைய டிஜிபி வந்து சொல்றாங்க, அவங்க கோலி குண்டோட அந்த ஜமேசா மூபின் வண்டியை ஓட்டிக்கிட்டு கோபாலபுரம் வந்து, முதலமைச்சரோடு கோலி குண்டு விளையாட்டு விளையாடுவதற்காக வந்தாரா ? இதெல்லாம் பேசிக் காமன்சென்ஸ்.
தமிழக மக்களை எந்த அளவுக்கு முட்டாள் என நினைக்கிறீங்க. இவுங்களுக்கு எதுவுமே தெரியாது. என்ன சொன்னாலும் கேட்டுப்பாங்க. நாம சொல்றதுதான் நியூஸ் என்று டிஜிபி அவர்கள், இங்கே இருக்கக்கூடிய சில காவல்துறை நண்பர்கள் குழந்தைத்தனமாக …. குழந்தை கூட நல்லா பேசும். 35 ஆண்டுகள், 36 ஆண்டுகள் காவல்துறையில் அனுபவம் இருக்கக்கூடிய காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்துற பிரஸ்மீட், குழந்தைத்தனமாக… இரண்டு குழந்தை விளையாட மாதிரி இருக்கு என தெரிவித்தார். அண்ணாமலையில் இந்த கருத்து திமுகவினரை எரிச்சல் அடையவைத்துள்ளது.