Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் எதுமே பேசல…! கரூர் சண்டையா பாக்காதீங்க…. பொறுப்போடு செயல்படுங்க … டிடிவி திடீர் அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கோயம்புத்தூர்ல சிலிண்டர் குண்டு வெடித்து,  நல்ல வேலையாக இறைவன் அருளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல்,  அதை கொண்டு வந்தவரே,  அதற்கு பலியான நிகழ்ச்சி எல்லாருக்கும் தெரியும். ஆனால் தமிழக முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காமல்,  இதைப் பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அதுவும் காவல்துறைக்கு தலைவராக இருப்பவர்,  இப்படி மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும்,  வருத்தமும் அளிக்கிறது.

இனியாவது தமிழ்நாட்டில் அரசாங்கம் தீவிரவாதிகள் விஷயத்திலே கடுமையான போக்கை கடைபிடிக்க வேண்டும். எப்பொழுது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள திமுக ஆட்சிக்கு வருதோ,  அப்ப எல்லாம் தீவிரவாதம் தலைதூக்கத் தொடங்குகிறது. அதனால் வெறும் வாக்கு வங்கி அரசியலை மட்டும் மனதில் கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பொறுப்பேச்சு அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பந்தமாக அண்ணாமலைக்கு தகவல்கள் தெரிந்தது தொடர்பாக அவரை NIA விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தொடர்பாக பேசிய டிடிவி தினகரன், கரூரை சேர்ந்த ரெண்டு பேருக்குள் நடக்கின்ற ஒரு சண்டையாக பார்க்க கூடாது. கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு  என்பது எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிற விஷயம். அதனால் அமைச்சர் அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும் என தெரிவித்தார்.

Categories

Tech |