தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாசிச சங்பரிவார கும்பல்களின் அடாவடியையும், அட்டூழியங்களை எதிர்கிறார்களா ? அது ஒன்றே போதும் அவர்களை நாங்கள் எந்த நேரத்திலும் தூக்கிக்கொண்டு போய் சிறை வைப்பதற்கு என்று ஒரு அடாவடி ஆட்சியை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது.
பாசிச சங்பரிவார கும்பல்களின் அநியாய, அட்டூழிய, அக்கிரமங்களை எடுத்து வைக்கிறார்களோ, அவர்களை கைதுசெய்து தூக்கி சிறையில் அடைப்பதற்கான ஒரு சட்ட பிரிவு. முதலமைச்சரை அவன், இவன், வாடா என்று கூப்பிட்டு பேசுகிறான். அவனை எல்லாம் ரெண்டு தட்டுத்தட்டி உள்ளே தூக்கி போட வேண்டிய காவல்துறை, திராவிட முன்னேற்ற கழகம் என்கிற இந்த சமூக நீதி இயக்கம்,
இந்த நாட்டில் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு காரணமாக இருந்த என் தாய் தமிழ் நாட்டின் இஸ்லாமிய உறவினர்களை கைது செய்வதற்கு உங்கள் காவல்துறை பயன்படுகிறது என்று சொன்னால், இது தமிழ் இனத்துக்கும், தமிழக அரசுக்கும் அவமானம் இல்லையா ? எமது தமிழக அரசே,
தமிழக காவல்துறையே எங்களைப் போன்று ஜனநாயக சக்திகள் மீது நட்போடு இருக்கின்ற எங்களைப் போன்றவர்களை பகைத்து கொண்டால் நாளை இந்த பாசிச, வெறிபிடித்த, ஆணவ கும்பலுக்கு இங்கே இருக்கிற எமது ஆயிரம் ஆயிரம் உறவுகள் சரியான பாடம் புகட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.