Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் சொல்லுவாரு… கட்சியில் பொறுப்பு இல்லை.. எனக்கு பேச அந்தஸ்து இல்லை.. !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பொதுவா விவாதத்திற்கோ, இல்ல அரசாங்கத்திற்கு வெளியே இருக்கிற கருத்துக்கு நான் சாதாரணமாக பதில் சொல்வதில்லை. என்னா எங்கள் கட்சியை பொறுத்தவரை நான்  அடிமட்ட தொண்டன் தான், எந்த பொறுப்பும் இல்லை. அதனால கட்சியோட பதில் சொல்ற அளவுக்கு எனக்கு அந்தஸ்து இல்லை. அதனால் அரசாங்கம் சார்பாக நிதியமைச்சர் என்பதன் அடிப்படையில் சில கருத்துக்களை பல இடங்களில் கூறினேன்.

தனிநபராக, பகுத்தறிவு இருக்கிறவனாக,  அறிவு இருக்கிறவனாக   நான் கூறினேனே தவிர கட்சி சார்பாக என்ன பதில் அளிக்கிறது ? என்பது  தலைவர் யாரை என்ன பதிலளிக்க சொல்வாரோ அவரே பதில் அளிப்பார்.  என்னைவிட நிறைய அனுபவம், அரசியல் தெரிந்த மூத்த நபர்கள் இருக்காங்க கட்சியில… அதனால அடிமட்ட தொண்டனாக கட்சி சார்பா பேசுறதுக்கு, எனக்கு உரிமை இல்லை.

எல்லா இடத்திலும் ஒன்றிய அரசாங்கம் பணத்தை வைத்து அரசியல் பண்றதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒன்னு கட்டிமுடிச்சி திறக்க போறாங்க. ஒன்னுல இன்னும் சுவர் கூட கட்டல. அதனால இது அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் விளையாடுற மாதிரி எனக்கு தெரியுது. ஆனா அதுக்கு மேல ஒரு கருத்து சொல்லனும். நான் கூட்டத்திலே சொல்ல மறந்துட்டேன். இப்ப எத்தனையோ திட்டத்தை ”பிரதான் மந்திரி” என்னமோ…  அப்படின்னு பெயர் மாத்துறாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |