போராடும் மாணவர்களை சுயநலத்திற்க்காக அரசியல் கட்சிங்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு. இதில் யார் வெளிநாட்டுக்காரர் ? யாரு நம் நாட்டுக்காரர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை , அதை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
CAA_வை பொருத்தவரை மத்திய அரசு தெளிவாக சொல்லியுள்ளது. இந்திய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. பக்கத்து நாட்டுல இருந்து வரக்கூடிய மக்களுக்கு தான் குடியுரிமை கொடுக்கலாமா ? வேண்டாமா ? ன்னு சொல்லி இருக்காங்க. இது முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தல் அப்படின்னு அரசியலுக்காக பீதியை கிளப்பி விடுறாங்க என்று விமர்சித்தார்.
இந்த நாட்டின் பிரிவினை வந்த போது இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகாமல் இதுதான் எங்க நாடு என்று கூறியோதோடு இதை ஜென்மபூமியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டில் இருந்து அவர்களை வெளியே அனுப்ப போவது இல்லை. அரசியல் கட்சியினர் சுயநலத்திற்காக தவறான விஷயம் பரப்பப்படுகிறது. இஸ்லாமியர்களுக்களை வெளியே அனுப்பும் பட்சத்தில் முதல் ஆளாக நான் ஆளாக குரல் கொடுப்பேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ரஜினி பேசும் போது , மாணவர்களைப் பொறுத்தவரை அரசியல் சுயநலத்துக்காக உங்களை பயன்படுத்துகிறார்கள். எனவே உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அரசியல் கட்சிகள் உங்களை பயன்படுத்திக் பாப்பாங்க. போராட்டம் செய்வதற்கு முன்பு பேராசிரியரிடம் , பெரியவர்களிடம் , தெரிந்தவர்களிடம் விரிவாக கேட்டுக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் போராட்டம் செய்யுங்க. இல்லைனா பிரச்சனை வரும். இப்போது எல்லா போலீஸ்சும் எப்படி இருப்பாங்கன்னு தெரியாது. ஒரே மாதிரி இருக்க மாட்டங்க. வழக்கு போட்டால் உங்களுடைய வாழ்க்கை முடிந்து போய்விடும் என்று மாணவர்களை அறிவுறுத்தினார்.