Categories
மாநில செய்திகள்

CAA அரசியல் செய்ய பீதியை கிளப்புறாங்க- ரஜினிகாந்த் அதிரடி …!!

CAA குறித்து அரசியல் கட்சிகள் பீதியை கிளப்புகின்றார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு.இதில் யார் வெளிநாட்டுக்காரர் யாரு நாட்டுக்காரர் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை , அதை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

CAA_வை பொருத்தவரை மத்திய அரசு தெளிவாக சொல்லியுள்ளது. இந்திய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது.பக்கத்து நாட்டுல இருந்து வரக்கூடிய மக்களுக்கு தான் குடியுரிமை கொடுக்கலாமா ? வேண்டாமா ? ன்னு சொல்லி இருக்காங்க.இது முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தல் அப்படின்னு அரசியலுக்காக பீதியை கிளப்பி விடுறாங்க என்று நடிகர் ரஜினிகாந்த தெரிவித்தார்.

Categories

Tech |